தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை சத்தியஜோதி பில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இந்தப் படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது.
அதாவது, இது ஒரு பீரியாடிக் படமாக தயாராகி வருவதால் இதன் முதல் பாகம் 1940 காலங்களில் நடப்பது போலவும் இரண்டாம் பாகம் 1990களில் நடப்பது போலவும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போலவும் உருவாக உள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள , இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இச்செய்தியினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.