spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜயின் ‘நா ரெடி’ பாடலுக்கு எழுந்த பலத்த எதிர்ப்பு… பாடலில் மாற்றம் செய்த படக்குழுவினர்!

விஜயின் ‘நா ரெடி’ பாடலுக்கு எழுந்த பலத்த எதிர்ப்பு… பாடலில் மாற்றம் செய்த படக்குழுவினர்!

-

- Advertisement -

புகார் எழுந்ததை அடுத்து நா ரெடி பாடலில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி லியோ படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

we-r-hiring

விஜய்யின் பிறந்த நாளான கடந்த 22 ஆம் தேதி இப்படத்தின் முதல் பாடல் சிங்கிளான நா ரெடி தான் வரவா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாடல் முழுக்க விஜய் சிகரெட் புகைப்பது போல அதிக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையலும் லியோ படத்தில் வரும் ‘நா ரெடி தான் வரவா’ பாடல் உள்ளதாக சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

அதையடுத்து இது குறித்து விளக்கம் அளிக்க விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுபபியது. இந்நிலையில் நா ரெடி பாடலில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யூடியூபில் உள்ள இந்தப் பாடலில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

MUST READ