சனி பிரதோசம்- திருவண்ணாமலை கோயிலில் ரஜினிகாந்த் சிறப்பு வழிபாடு
22 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பிரதோஷ தினத்தில் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாமலையாரை தரிசித்தார்.
திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்து இயக்கும் படமான லால் சலாம் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என அறிவிக்கட்டு இருந்தது. படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் 25 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். கடைப்பிடிப்பு தளத்தை அறிந்த பொதுமக்கள் படப்பிடிப்பு தளத்தின் அருகே ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ரஜினிகாந்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் சனி பிரதோஷ தினமான இன்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கோவிலுக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையை அம்மனை மனதார தரிசித்தார். தொடர்ந்து திருக்கோவிலுக்கு ரஜினிகாந்த் வந்ததை அறிந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கோவிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் திருமஞ்சனகோபுரம் வழியாக தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.


