spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகௌதம் மேனன் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்... வேட்டையாடு விளையாடுவைத் தொடர்ந்து 'வாரணம் ஆயிரம்' ரீரிலீஸ்!

கௌதம் மேனன் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்… வேட்டையாடு விளையாடுவைத் தொடர்ந்து ‘வாரணம் ஆயிரம்’ ரீரிலீஸ்!

-

- Advertisement -

வாரணம் ஆயிரம் திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்பு பெற்ற கல்ட் கிளாசிக் படங்கள் தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபமாக கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கிலும் காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன.

we-r-hiring

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படமும் ரீரிலீஸ் ஆக இருக்கிறது.

வாரணம் ஆயிரம் படத்தை 90’ஸ் கிட்ஸ்களின் எமோஷன் என்றே சொல்லலாம். சூர்யா நடிப்பில் அமர்க்களப்படுத்திருந்தார். இளைஞன் முதல் வயதானவர் வரை உடல் வாகுவை காட்சிக்கு ஏற்ப மாற்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இப்போதும் பலருக்கு அந்த படம் சிறந்த மோட்டிவேஷனாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த படம் ஜூலை 19இல் வெளிநாடுகளிலும் ஜூலை 21 இல் தெலுங்கிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. தமிழிலும் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ