அருள்நிதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அருள்நிதி ,தொடர்ந்து வித்தியாசமானகதையில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதன் வெற்றிக்கு பிறகு தற்போது 7 ஆண்டுகள் கழித்து டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கியிருந்த அஜய் ஞானமுத்து இயக்க அருள்நிதி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் மற்றொரு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே கேரளாவில் தொடங்கியதாகவும், தற்போது 80 சதவீதம் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. எனினும் இது தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் மற்றும் ஜூங்கா திரைப்படத்திலும், தனுஷ் உடன் பா பாண்டி திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படத்திலும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.