Homeசெய்திகள்சினிமா15 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்பிரமணியபுரம்..... சசிகுமார் வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!

15 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்பிரமணியபுரம்….. சசிகுமார் வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!

-

- Advertisement -

நடிகர் சசிகுமார் 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின் 2010 ஈசன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சுப்பிரமணியபுரம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

we-r-hiring

தற்போது சுப்பிரமணியபுரம் படத்தின் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸானா அறிவிப்பை சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “இது நேற்று நடந்தது போல் இருக்கிறது. சுப்பிரமணியபுரம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நினைவுகள் அனைத்தும் புதுமையானதாக இருக்கிறது. நீங்கள் சுப்பிரமணியபுரம் படத்தை அங்கீகரித்தது மட்டுமல்லாமல் அதை கொண்டாடினீர்கள். இந்த குறிப்பிடத்தக்க நாளில் நான் மீண்டும் இயக்குனராகும் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

MUST READ