தனுஷ் , தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.
ப. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு 5 வருடங்கள் கழித்து தனுஷ் இயக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்திற்காக தனுஷ் மொட்டை அடித்து தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.சமீபத்தில் D50 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா,சந்திப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ், விஷ்ணு விஷால், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா தனுஷிற்கு அண்ணனாகவும் சந்திப் கிஷன் தனுஷிற்கு தம்பியாகவும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு ராயன் என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் ஒரு குடும்பத்தின் பழிவாங்கும் கதையாக உருவாக்கப்பட உள்ளது. இதன் படப்பிடிப்பு 110 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருப்பதாகவும் தனுஷ் இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு திரையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படப்பிடிப்பிற்காக முழு ராயபுரத்தையே பிரம்மாண்டமான செட்டாக உருவாக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தனுஷின் கேரியரில் இந்த படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.