முகேன் ராவ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முகேன் ராவ் மலேசிய இந்திய பாடகர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா அலி கான் என்ற பெண் இயக்குனரின் இயக்கத்தில் வெளியான மதில் மேல் காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் கவின் ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய வேலன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
தற்போது இவர் அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து ஆதித்யா கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி பிக்சர்ஸ் புரடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. டாடா படத்தில் இசை அமைத்த ஜென் மார்ட்டின் இதற்கு இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜை உடன் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.