Homeசெய்திகள்தமிழ்நாடுகாதணி விழா- 10 மாட்டு வண்டிகளில் வந்த சீர்வரிசைப் பொருட்கள்!

காதணி விழா- 10 மாட்டு வண்டிகளில் வந்த சீர்வரிசைப் பொருட்கள்!

-

- Advertisement -

 

காதணி விழா- 10 மாட்டு வண்டிகளில் வந்த சீர்வரிசைப் பொருட்கள்!
File Photo

புதுக்கோட்டை மாவட்டம், மாங்காட்டில் நடைபெற்ற காதணி விழாவுக்கு தாய்மாமன்கள் மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி, சீர் கொண்டு வந்த நிகழ்வு காண்போரைக் கவர்ந்தது.

we-r-hiring

பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

காதணி விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி, 10- க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் அணி வகுத்து வர, செண்டை மேளங்கள் முழங்க, பெண்கள், இனிப்பு, பழங்கள், பூக்கள் உள்ளிட்டத் தட்டுகளை ஏந்திய படியும், ஆண்கள் ஆடு, மிதிவண்டி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களைப் பிடித்தபடி ஊர்வலகமாக வந்து, சீர் செய்தனர்.

அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்கும் கிஷன் தாஸ்!

அதன் பிறகு சீர்வரிசைப் பொருட்களை மேள, தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்த சத்தத்தோடு மண்டபத்திற்குள் எடுத்துச் சென்றனர். அத்துடன், விழாவில் கலந்து கொண்ட 500- க்கு மேற்பட்டோருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

MUST READ