கிஷன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபராக இருந்து பிரபலமான கிஷன்தாஸ், கடந்த 22ல் ஜனவரி மாதத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் நடித்த முதல் படமே இவருக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று தந்தது.

இதைத் தொடர்ந்து இவர் அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் தருணம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிஷன் தாஸ் மற்றொரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகாஷ் ஆனந்த் இயக்குகிறார். இதில் கிஷன் தாசுடன் இணைந்து மோனிகா சின்ன கொட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சிங் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 நாட்களுக்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.