spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்கள் மிதிவண்டி வழங்கியதை இலவசமாக பார்க்க கூடாது- உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் மிதிவண்டி வழங்கியதை இலவசமாக பார்க்க கூடாது- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

மாணவர்கள் மிதிவண்டி வழங்கியதை இலவசமாக பார்க்க கூடாது- உதயநிதி ஸ்டாலின்

2022-2023 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அரசுப் பள்ளியில் படிக்கும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 600 மாணவர்களுக்கு ரூ.235 .92 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

உதயநிதி

11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சேப்பாக்கம் தொகுதியில் முதற்கட்டமாக 400 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய கல்வியில் முழு கவனம் செலுத்துங்கள். மாணவர்களிடம் இருந்து பறிக்க முடியாத செல்வம் கல்வி செல்வம் மட்டும் தான். மாணவர்கள் மிதிவண்டி வழங்கியதை இலவசமாக பார்க்க கூடாது. உங்கள் கல்விக்கு கிடைக்கக்கூடிய உதவிக்கரம் என்று நினைக்க வேண்டும். 9 வருஷத்துக்கு முன்னாடி ரூ.15 லட்சம் தர்றேன்னு சொன்னீங்களே.. ரூ.15 ரூவாயாவது கொடுத்தீங்களா? மகளிர் உரிமைத் தொகை குறித்து கேட்க பாஜகவினருக்கு அருகதை இல்லை” என சாடினார்.

MUST READ