spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஈரம்' படத்தின் கூட்டணியில் உருவாகும் 'சப்தம்'....... டப்பிங்கை தொடங்கிய ஆதி!

‘ஈரம்’ படத்தின் கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்’……. டப்பிங்கை தொடங்கிய ஆதி!

-

- Advertisement -

ஆதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் ‘ஈரம்’ திரைப்படம்  வெளியானது
இந்த படத்தில் ஆதி, நந்தா, சிந்து மேனன் சரண்யா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

we-r-hiring

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு 13 வருடங்கள் கழித்து, ஆதி மற்றும் அறிவழகன் கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக ‘சப்தம்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் ஆதியுடன் இணைந்து சிம்ரன், லட்சுமிமேனன், லைலா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் தமன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஈரம் படத்தைப் போலவே ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் டைட்டில் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மூணாறு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று கடந்த மே மாதம் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை ஆதி தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ