spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவாளை விட அவன் கண்கள் கூர்மையானது...... மிரள வைக்கும் கங்குவாவின் அடுத்த போஸ்டர்!

வாளை விட அவன் கண்கள் கூர்மையானது…… மிரள வைக்கும் கங்குவாவின் அடுத்த போஸ்டர்!

-

- Advertisement -

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து யோகி பாபு, கோவை சரளா, திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் பகுதிகளில் அடர்ந்த காடுகளில் நடைபெற்று வந்தது. தற்போது 80 சதவீத படப்பிடிப்புகளும் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

we-r-hiring

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் இந்த படம் தொடர்பாக வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் 2 நாட்களுக்கு முன்பாக கங்குவா கிளிம்ஸ் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியானது.

அதன்படி நாளை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிம்ஸ் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து கங்குவா படக்குழுவினர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யும் விதத்தில் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு தெறிக்க விடுகின்றனர்.

கங்குவா படத்தின் கிளிம்ஸ் வெளியாவதற்கு இன்னும் 14 மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் மிரள வைக்கும் மற்றுமொரு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உறைய வைத்துள்ளனர். இந்த போஸ்டரில்,THE MAN THE WILD THE STORY என்றும் ஜூலை 23 நள்ளிரவு 12.01 மணி அளவில் கிளிம்ஸ் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ