Homeசெய்திகள்சினிமாசிரஞ்சீவியின் போலா சங்கர்..... ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அப்டேட்!

சிரஞ்சீவியின் போலா சங்கர்….. ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

போலா சங்கர் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் போலா சங்கர். இந்த படம் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ள போலா சங்கர் திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தமன்னாவும் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர்.

ஏ கே என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாகர் மகதி இதற்கு இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் ஒரு மாஸ் என்டர்டைனர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், அதற்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ