Homeசெய்திகள்சினிமாதனுஷுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!

தனுஷுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!

-

- Advertisement -

தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனுஷின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் அடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

அதன்படி சேகர் கம்முலா மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களாக பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

MUST READ