Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

-

- Advertisement -

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது.

நாளை 10 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே| Dinamalar

மணப்பாறை- திருச்சி இடையே நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதனால் ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை காரணமாக திருச்சியில் இருந்து புறப்படும் 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி- ஈரோடு, திருச்சி- தஞ்சாவூர், திருச்சி- கரூர் உள்ளிட்ட முன்பதிவில்லா ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

we-r-hiring

இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ஊழியர்கள், பணிக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர்: முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The incident where an old woman's severed leg was found in a locomotive  caused a stir at the Trichy railway station. | ரயில் என்ஜினில் மூதாட்டியின்  துண்டான கால்: திருச்சி ரயில் நிலையத்தில் ...

திருச்சியில் இருந்து வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு இல்லாத ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும், சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ