spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசைக்காலஜிக்கல் திரில்லரில் நடிக்கும் கயல் ஆனந்தி..... லேட்டஸ்ட் அப்டேட்!

சைக்காலஜிக்கல் திரில்லரில் நடிக்கும் கயல் ஆனந்தி….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

திரை உலகில் அறிமுகமாகவும் பெரும்பாலான நடிகைகள் பலர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், அமலாபால், ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்டோர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன், கயல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த கயல் ஆனந்தி இணைந்துள்ளார்.
கயல் ஆனந்தி சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். குறிப்பாக மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் கயல் ஆனந்திக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

we-r-hiring

இந்நிலையில் அவர் ‘ஒயிட் ரோஸ்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக ஆர்கே சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ராஜசேகரன் எழுதி இயக்குகிறார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

வெற்றி அரசு ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரஞ்சனி இந்த படத்தை தயாரிக்கிறார். ஜோகன் சிவனேஷ் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ