spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇஸ்லாமியர்கள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் கோழைத்தனம் அல்ல..... நடிகர் ராஜ்கிரண்!

இஸ்லாமியர்கள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் கோழைத்தனம் அல்ல….. நடிகர் ராஜ்கிரண்!

-

- Advertisement -

இஸ்லாமியர்கள் குறித்து நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ராஜ்கிரண் 1990 காலகட்டங்களில் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என்ன பன்முகத் திறமைகளை உடையவர். சமீப காலமாக இவர் குணச்சித்திர இடத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

we-r-hiring

நடிகர் ராஜ்கிரண் சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்துக்களை கூறுவதில் ஆர்வமுடையவர். எந்த கருத்துக்களாக இருந்தாலும் அதனை சுதந்திரமாக பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது இஸ்லாமிய சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி,  “இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,
எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாகவாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல…
இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால் பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர் இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்… இந்தப்பொறுமையை
தவறாகப்புரிந்து கொண்டு கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,
அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

MUST READ