spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசரத்குமார், கௌதம் கார்த்திக் கூட்டணியின் 'கிரிமினல்'...... கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!

சரத்குமார், கௌதம் கார்த்திக் கூட்டணியின் ‘கிரிமினல்’…… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!

-

- Advertisement -

சரத்குமார் தற்போது பல படங்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் நடிகர் கௌதம் கார்த்திக் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சரத்குமார் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரின் கூட்டணியில் ‘கிரிமினல்‘ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி இயக்கியுள்ளார். பர்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இதற்கு பிரசன்னா எஸ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் கிரிமினல் படத்தில் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ