சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். சிலை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்தால் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படம் 2 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் தற்போது வரை 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் பலரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.


