spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு வேலைக்காக பாஜக நிர்வாகிடம் பணம்கொடுத்து ஏமாற்றம் அடைந்த பெண்:பாஜக நிர்வாகி மிரட்டல் ஆடியோ வைரல்…

அரசு வேலைக்காக பாஜக நிர்வாகிடம் பணம்கொடுத்து ஏமாற்றம் அடைந்த பெண்:பாஜக நிர்வாகி மிரட்டல் ஆடியோ வைரல்…

-

- Advertisement -

அரசு வேலைக்காக பாஜக நிர்வாகியிடம் பணம்கொடுத்து ஏமாற்றம் அடைந்த பெண் பணத்தைகேட்டு திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரிடம் புகார்: பணம் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் மற்றொரு பாஜக நிர்வாகி மிரட்டல் ஆடியோ வைரல்…

ஒருகாலத்தில் அரசு வேலை வேண்டுமென்றால் தங்களது கல்வி தகுதிக்கு ஏற்ப சம்மந்தப்பட்டவர்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை எழுதியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். ஆனால் சமீபகாலமாக இத்தகைய அரசு வேலைவாய்ப்பை வழங்கும் பணியினை மத்திய, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆளும் கட்சி பிரமுகர்கள் கையில் எடுத்துக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் அரசு வேலைக்கு தகுதி படைத்த இளைஞர்கள் நிலை ஆட்சியாளர்களால் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட தட்டைகால்படுகையை சேர்ந்தவர் சுகன்யா.சுகன்யா கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த சதாசதீஷ் என்ற பாஜக நிர்வாகி மூலம் அரசு வேலைபெறுவதற்காக ராமன் என்பவரிடம் லட்சக்கணக்கில் வழங்கியுள்ளார். ஆனால் சுகன்யாவிற்கு ஜூன் மாதம் வேலை கிடைத்துவிடும், ஜூலை மாதம் வேலை கிடைத்துவிடும்,ஆகஸ்ட் மாதம் வேலை கிடைத்துவிடும் என பாஜக நிர்வாகி சதாசதீஷ் கூறிவந்துள்ளார்.அரசு வேலைக்காக பாஜக நிர்வாகிடம் பணம்கொடுத்து ஏமாற்றம் அடைந்த பெண் பணத்தைகேட்டு  திருவாரூர்  மாவட்ட பாஜக தலைவரிடம் புகார்: இதனால் மனமுடைந்த சுகன்யா மற்றொரு பாஜக நிர்வாகி அய்யாகுட்டி மூலம் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரை அணுகி சதாசதீஷ் மீது புகார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அரசு வேலைக்காக பணம்கொடுத்து ஏமாற்றம் அடைந்த சுகன்யா மற்றும் பாஜக நிர்வாகிகள் பாஸ்கர், அய்யாகுட்டி, சதாசதீஷ் ஆகிய 4 பேரும் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த ஆடியோவில் பாஜக திருவாரூர் மாவட்டத்தலைவர் பாஸ்கர், மற்றொரு பாஜக நிர்வாகி சதாசதீஷிடம் ஒருவாரத்திற்குள் வாங்கிய பணத்தை சுகன்யாவிடம் திருப்பி தரவேண்டும் என எச்சரிக்கிறார்.இதற்கிடையே மற்றொரு பாஜக நிர்வாகி அய்யாகுட்டி ஒருவாரகாலத்திற்குள் பணம் கிடைக்காவிடில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்து பேசுகிறார்.

இந்த ஆடியோ உரையாடல் தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ