spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடம்பூரில் ரூபாய் 300 கோடியில் தாவரவியல் பூங்கா - அரசாணை

கடம்பூரில் ரூபாய் 300 கோடியில் தாவரவியல் பூங்கா – அரசாணை

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தாவரவியல் பூங்காவனது 138 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கின்றது. அதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

we-r-hiring

2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதன் படி 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணையை சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் 138 ஏக்கர் பரப்பளவில் 300 கோடி ரூபாய் செலவில் இருந்த தாவரவியல் பூங்காவானது அமைக்கப்பட இருக்கின்றது. மிக குறிப்பாக இந்த தாவரவியல் பூங்கா மற்றும் அதனுடைய செயல்பாடுகள் தொடர்பாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அங்கு நிலம் சார்ந்து மண் சார்ந்து இருக்கக்கூடிய அரிய வகை தாவரங்கள் பாதுகாக்கப்படும்.

அதேபோல ரோஸ் கார்டன் தொடங்கி அனைத்து வகை மரங்களை பாதுகாக்கும் விதமாக இந்த தாவரவியல் பூங்காவனது அமைய இருக்கின்றது. அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் ஆகிவற்றை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும் இந்த தாவரவியல் பூங்காவனது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனை தொடர்ந்து கல்வி மையமாகவும் இந்த தாவரவியல் பூங்கா இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் அமைக்கக்கூடிய இந்த தாவரவியல் பூங்கா மூலமாக அந்தப் பகுதி மட்டுமல்லாது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல பகுதிகளில் அழிந்து வரக்கூடிய பல தாவரங்கள், மரங்கள் புதிதாக உருவாக்கப்படக்கூடிய அனைத்தும் ஆய்வும் செய்து இங்கு பயிரிடப்பட இருக்கின்றது.

அதற்காகவே இந்த அரசாணை ஆனது வெளியிடப்பட்டு இருக்கின்றது. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 138 ஹெக்டேர் பரப்பளவில் இந்த தாவரவியல் பூங்காவனது அமைக்கப்பட்டு அரியவகை தாவரங்களை மீண்டும் புத்துயிர் செய்வதற்காகவும் தொடர்ச்சியாக புதுவித ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்காகவும் இந்த புதிய பூங்காவானது அமைக்கப்பட இருக்கின்றது .

MUST READ