
ஜி20 உச்சி மாநாடு அழைப்பிதழில் பாரத்தின் குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டதும், பாரதத்தின் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பும் பேசும் பொருளாகியிருக்கிறது. ‘இந்தியாவின்’ பெயர் ‘பாரத்’ என்று மாற்றம் செய்யப்படவுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சாட்டை முதல் வாத்தி வரை… தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர்கள்!
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் மற்றும் இந்திய பிரதிநிதிகளுக்கு வரும் செப்.09- ஆம் தேதி குடியரசுத் தலைவர் சார்பில் விருந்து அளிக்கப்படவுள்ளது. இதில், கலந்து கொள்ளும்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், வழக்கமாக இந்திய குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்படுவதற்கு பதிலாக, பாரத் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அவர் பாரதத்தின் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனுஷின் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
வரும் செப்.18- ஆம் தேதி அன்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், இந்த தொடரின் நாட்டின் பெயரை மாற்றுவதற்கான மசோதா கொண்டு வரப்படுமா? அல்லது அறிவிப்பாணை வெளியாகுமா? என்ற கேள்விகளை இந்த நடவடிக்கைகள் எழுப்பியிருக்கின்றன. இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆதரவும், எதிர்ப்புமாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


