spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராணுவ பின்னணியில் உருவாகும் கமல்ஹாசனின் 'KH233'!

ராணுவ பின்னணியில் உருவாகும் கமல்ஹாசனின் ‘KH233’!

-

- Advertisement -

கமல்ஹாசனின் 233 வது படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கல்கி 2898AD படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

we-r-hiring

இதைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவியது. தற்போது இதன் கூடுதல் தகவலாக இந்த படம் மிகப்பெரிய ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் ராணுவ பின்னணியில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகின்ற அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ