கார்த்தி, ராஜுமுருகன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜப்பான். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கார்த்தி உடன் இணைந்து அனு இமானுவேல், விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹெயிஸ்ட் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கிளிம்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி😈 https://t.co/XeZtLThJ31
— Karthi (@Karthi_Offl) September 13, 2023
அதை தொடர்ந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டு டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.