spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சத்தமே இல்லாமல் முழு படத்தை முடித்த சர்வானந்த்!

சத்தமே இல்லாமல் முழு படத்தை முடித்த சர்வானந்த்!

-

- Advertisement -

நடிகர் சர்வானந்த் சத்தமே இல்லாமல் ஒரு முழு படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளாராம்.

தற்போது ஹீரோ கதையை தேர்வு செய்த உடனே படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கிவிடுகின்றனர். பர்ஸ்ட் லுக் வருவதற்கு முன்னர் அதற்கு ஒரு பர்ஸ்ட் லுக், டீசருக்கு முன்னாள் ஒரு டீசர், ட்ரைலர் அறிவிப்புக்கு ஒரு ட்ரைலர் என எண்ணில் அடங்கா ப்ரொமோஷன் யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் நடிகர் சர்வானந்த் சத்தமே இல்லாமல் ஒரு முழு படத்தையும் நடித்து முடித்துள்ளார்.

பலே மஞ்சி ரோஜு படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இந்தப் படத்தை இயக்குகினார். இந்தப் படம், லண்டன், UK மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் யாருக்கும் தெரியாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘மனமே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஓரிரு நாட்களில் விநாயக சதுர்த்தி அன்று வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வானந்த் இதற்கு முன்னர் நடித்த கணம் திரைப்படம் விமர்சன  ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக அவ்வளவாக வரவேற்பு இல்லை. எனவே இந்தப் புதிய படத்தை அவர் நம்பியுள்ளார்.

MUST READ