விஜய் ஆண்டனி, தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர். இவர் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் நடிப்பில் வெளியானது. மேலும் சிஏ சமுதாயம் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம்.
நான் இப்போது சிறு மனவேதனையுடன் இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி யூட்யூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ ஆர் ரகுமான் அவர்களையும் தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே!
அந்த youtube சேனல் மீது நான் மான நஷ்டை வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MARS தமிழ்நாடு என்ற youtube சேனலை நடத்தி வரும் பெண்மணி ஒருவர் சமீபத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ஏ ஆர் ரகுமானை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதற்கு முற்றுப்பள்ளி வைக்கும் விதமாக விஜய் ஆண்டனி தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


