spot_imgspot_img
Homeசெய்திகள்காவிரி நீர் விவகாரம் – இரண்டு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச அன்புமணி வலியுறுத்தல்

காவிரி நீர் விவகாரம் – இரண்டு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச அன்புமணி வலியுறுத்தல்

-

- Advertisement -

காவிரி நீர் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் விவகாரம் – இரண்டு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச அன்புமணி வலியுறுத்தல்

கர்நாடக விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் சார்பில் நீர்வளத்துறை அமைச்சருடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ள நிலையில், அழைப்பு வந்தால் நானும் உடன் செல்வேன் என தெரிவித்த அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்று ஒன்றிய அரசு முடிவு தெரிவித்தால் பாமக நிலைபாட்டினை தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.

we-r-hiring

காவிரி நீர் விவகாரம் – இரண்டு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச அன்புமணி வலியுறுத்தல்

ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் 2026ல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தலை கொண்டு வர வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய கட்சிகளுக்கு சாதகமாகவும், மாநில கட்சிகளுக்கு பாதகமாகவும் உள்ளது என்றார்.

மகளிர் உரிமை தொகை திட்டம் நல்ல வரவேற்கப்பட வேண்டிய திட்டம், மக்களுக்கான நலத்திட்டமாக உள்ளது, ஆனால் வளர்ச்சிக்கான திட்டங்களையும் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

MUST READ