108 திவ்ய தேசங்கள் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாவிக்கிறார். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கடந்த 23 ஆம் தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்த்து. அதன் தொடர்ச்சியாக இன்று திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற்றது.
இந்த திருவிழா ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 2 ஆம் தேதி அன்று அதிகாலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு உள் பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளிய போது, கோவிந்தா, கோவிந்தா என பக்தர்தர்கள் கோஷங்களை எழுப்பினர் . இதனைத்தொடர்ந்து ஆழ்வார்களால் பாடப்பெற்ற தமிழ் பாசுரங்களான நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்பட்டது. பின்னர் ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி. ஏராளமான பக்தர்கள் வருகை தரக்கூடும் என்பதால் அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 1,250 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
32 இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். காலை 6 மணிக்கு மேல் பக்தர்களுக்கு பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


