spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிரிவடையும் சென்னை மெட்ரோ ரயில் சேவை!

விரிவடையும் சென்னை மெட்ரோ ரயில் சேவை!

-

- Advertisement -

 

விரிவடையும் சென்னை மெட்ரோ ரயில் சேவை!
Photo: Chennai metro trains

சென்னை மெட்ரோ ரயில் சேவையை மேலும் நீட்டிப்புச் செய்வது தொடர்பான சாத்தியக் கூறு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.

we-r-hiring

ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு…..மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஐந்தாவது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.1 கி.மீ. தூரத்திற்கு சேவையை நீட்டிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

15 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் 468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வுச் செய்யப்பட்டிருந்தனர். இதேபோல், மூன்றாவது வழித்தடத்தில் சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை 23.5 கி.மீ. தூரத்திற்கு 12 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் 5,458 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கவும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை!

முன்மொழியப்பட்ட இடத்தில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், தற்போதைக்கு மாநகர பேருந்து சேவைகளை அதிகப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பரிந்துரைச் செய்துள்ளது.

MUST READ