spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிலை உயர்ந்த சொகுசு கார் வாங்கிய டாப்ஸி.... வைரலாகும் புகைப்படம்!

விலை உயர்ந்த சொகுசு கார் வாங்கிய டாப்ஸி…. வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

டாப்ஸி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் கடந்த 2011 இல் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில், பரத் நீலகண்டன் இயக்கி வரும் ஏலியன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் ஷாருக்கானின் டுங்கி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவ்வாறு பிசியாக நடித்து வரும் நடிகை டாப்ஸி தற்போது ரூ3.5 கோடி மதிப்புடைய
மெர்சிடிஸ் மெபேக் ஜிஎல்எஸ் சொகுசு சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.  இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ