
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செப்.23) இரவு 09.00 மணியளவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் கடும் அவதியடைந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. பாராட்டு!
சென்னையில் கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, வளசரவாக்கம், ஆவடி, முகப்பேர், அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்டப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
கனமழை பெய்து வருவதால், தாம்பரம்- மேடவாக்கம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல், சுரங்கப்பாதைகள், முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது; இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.