ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் முந்தைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் வித்தியாசமான கதைக்களத்தில் இவர் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இழந்த வெற்றியை ஆதிக்க ரவிச்சந்திரனுக்கு திரும்ப பெற்றுத் தந்துள்ளது.

இது சம்பந்தமாக ஆதிக்க ரவிச்சந்திரன் சமீபத்தில் மார்க் ஆண்டனிதிரைப்பட வெற்றி விழாவில் இந்த வெற்றிக்கு நடிகர் அஜித் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து நடிக்கும் போது அஜித் தன்னை ஊக்குவித்ததாகவும் அஜித்திற்கு தன் தனிப்பட்ட வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் வெற்றி விழாவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் விடாமுயற்சி படத்திற்குப் பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


