Homeசெய்திகள்சினிமாசொல்லி அடித்த அட்லீ..... 1000 கோடியை வேட்டையாடிய 'ஜவான்'!

சொல்லி அடித்த அட்லீ….. 1000 கோடியை வேட்டையாடிய ‘ஜவான்’!

-

- Advertisement -

ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாக்கியுள்ள இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். ஷாருக்கானின் பதான் திரைப்படத்தைப் போல இப்படமும் அதிக வசூலை குவித்து வருகிறது.

அந்த வகையில் 17 நாட்களில் 1004. 92 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிற்கு சென்ற எந்த இயக்குனரும் இந்த அளவில் வெற்றியை கண்டதில்லை. இயக்குனர் அட்லீ அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அட்லீயும் ஷாருக்கானும் ஜவான் படத்தின் மூலம் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்

MUST READ