- Advertisement -
வேலை செய்யும் மாநில மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்- நிர்மலா சீதாராமன்
எந்த மாநிலத்துக்குப் பணிக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேலைவாய்ப்பு திருவிழாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது குறித்து உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரியளவில் பங்கேற்பதில்லை. எந்த மாநிலத்துக்குப் பணிக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழகத்தில் இருந்து நிறைய மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூரில் போதுமான பணியாளர்கள் கிடைக்காதபோது தகுதியான பிற மாநில மக்களைக் கொண்டுதான் பணியிடங்களை நிரப்ப முடியும்.
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரியளவில் பங்கேற்பதில்லை. ஆகவே தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தேர்வு எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கிருப்பவர்கள் வெளிமாநிலத்திற்குச் சென்றாலும், அவர்கள் இங்கே வந்தாலும் பிரச்சினை தான். கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்திய அரசில் ஒவ்வொரு துறை வாயிலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனக் கூறினார்.


