ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இதில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து அபிநயா, சுனில், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் வசூலிலும் இத்திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி மார்க் ஆண்டனி திரைப்படம் 10 நாட்களில் உலகம் முழுவதும் 85 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் 100 கோடியை நெருங்கி விடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -