- Advertisement -
மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி!
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவாகனம் அந்தரத்தில் தொங்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, மலைப் பகுதிக்கு செல்லும் திம்பம் மலைப்பாதையில் புனேவில் இருந்து கோவைக்கு பைப்பு பாரம் ஏற்றி சென்ற லாரி நேற்று இரவு திம்பம் மலைப்பாதை 10 வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதில் ஓட்டுநர் குமார் அதிர்ஷ்டவசமாக எந்த காயம் இன்றி லாரியில் இருந்து இறங்கி குதித்து உயிர் தப்பினார்.

இன்று காலை கிரேன் மூலம் லாரியை மீட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது அதிக பாரம், அதிக உயரம், நீளமான வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தும், வட இந்திய பகுதிகளில் இருந்து வரும் வாகன ஒட்டிகள் விதியை மீறுவதால் இது போன்ற ஆபத்துக்கள் ஏற்படுகின்றது. இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.