மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானது. இதில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முரளி சர்மா ஜெயசுதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் மகேஷ்பாபு இதனை இயக்கியிருந்தார். நீரவ் ஷா ஒளிப்பதிவிலும் ரதன் இதற்கு இசையிலும் உருவாகியுள்ளது. காமெடி கலந்த காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படம் வருகின்ற அக்டோபர் 5ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.