இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரையில் தமிழ் சினிமாவில் மொத்தம் 4 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வருகின்ற 19 அக்டோபரில் வெளியாக இருக்கும் லியோ திரைப்படம் இவரது 5-வது திரைப்படம் ஆகும். தமிழ் திரைப்பட இயக்குனர் வரிசையில் மிகவும் குறைந்த படங்களை இயக்கி பிரபலம் அடைந்த இயக்குனர் இவர் என்பதில் சந்தேகம் இல்லை.
லோகேஷ் இயக்கிய இரண்டாவது படமான ‘கைதி’ படம் மூலமே 100 கோடி வசூலைக் கொடுத்தார். மிகவும் குறைந்த பட்ஜெட் 25 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 105 கோடி வசூலை எட்டியது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது 3-வது படமான ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தார். மாஸ்டர் திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வசூலை முறியடித்தார். தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இவர்களது கூட்டணியில் இணைந்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படம் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றார்.
லோகேஷ் கனகராஜ் தனது 4-வது படமான விக்ரம் திரைப்படம் மூலம் 400 கோடி வசூலை எட்டினார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பசில், என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். சூர்யா கௌரவ வேடத்தில் வந்து கலக்கி இருந்தார்.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தின் பட்ஜெட் 120 கோடி. 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 400 கோடியை தாண்டி வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 425 கோடியாகும்.
இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த லியோ திரைப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் 500 கோடி வசூலை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது படத்தில் 100 கோடி, 3-வது படத்தில் 200 கோடி, 4-வது படத்தில் 400 கோடி என வசூலில் உச்சத்திற்கு வந்துகொண்டிருக்கும் லோகேஷ் லியோ படத்தின் மூலம் 500 கோடி எனும் உச்சத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


