சூப்பர் மார்கெட்டில் சிறுமி பலி! தெலங்கானாவில் நடந்த சோகம்
தெலுங்கானா சூப்பர் மார்க்கெட்டில் ஃப்ரிட்ஜை தொட்ட 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு 4 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றுளார். அங்கு இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் சாக்லெட் மற்றும் ஜூஸ்கள் இருந்தன. அதனை எடுப்பதற்காக சிறுமி குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் 4 வயது சிறுமி தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்த அவரது தந்தை, சிறுமியை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சூப்பர் மார்க்கெட்டில் மின்சார பிரச்சனை இருப்பதாகவும், குளிர்சாதன பெட்டியின் கதவுகளை சிறுமி தொட்ட தருணத்தில் மின்சாரம் தாக்கி அவர் இறந்துவிட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.