
50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ‘லியோ’ படத்தின் ட்ரைலரைக் கண்டு ரசித்த வானதி சீனிவாசன்!
50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 05- ஆம் தேதி மதியம் 02.00 மணிக்கு தொடங்கியது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ரூட் 77 ரன்களையும், ஜோஸ் பட்லர் 43 ரன்களையும் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 36.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கான்வே 152 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.


