spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிடீரென பெயரை மாற்றிய நடிகர் அஜித்- ரசிகர்கள் அதிர்ச்சி

திடீரென பெயரை மாற்றிய நடிகர் அஜித்- ரசிகர்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

திடீரென பெயரை மாற்றிய நடிகர் அஜித்- ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித்தின் ‘AK Moto Ride’ நிறுவனத்தின் பெயர் ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ என மாற்றப்பட்டுள்ளது.

AK Moto Ride: Actor Ajith Kumar begins bike touring company! Tamil Movie,  Music Reviews and News

நடிகர் அஜித் குமார் பைக் ரேசர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பைக் ரேஸில் அதிகம் ஆர்வம் காட்டுபவர். இந்நிலையில் ‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற புதிய பைக் சுற்று பயண நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.

we-r-hiring

இந்நிலையில் AK MotoRide நிறுவனத்தின் பெயர் அஜித்தின் பெயரில் இருப்பதை விரும்பாத அவர், “வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்” என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற பெயரில் பைக் சுற்றுலா நிறுவனத்தை அஜித் நடத்த உள்ளார்.

AK Moto Ride' - பைக் டூரிங் நிறுவனம் தொடங்கிய நடிகர் அஜித்குமார்!

முதற்கட்டமாக ராஜஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 23-ம் தேதிக்குள் அதற்கான பயணம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு இந்நிறுவனம் சுற்றுப்பயணங்களை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளையும் வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ