spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவங்கிக்கணக்கில் ரூ.753 கோடி - வாடிக்கையாளர் அதிர்ச்சி!

வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

-

- Advertisement -

வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

சென்னையில் மருந்து கடை ஊழியரான முகமது இத்ரீஸ் என்பவரது கோடாக் மகேந்திரா வங்கி கணக்கில் ரூ.753 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

Image

சென்னை அடுத்த தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரது கோடாக் மகேந்திரா வங்கி கணக்கில் ரூ.753 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததுள்ளது. சங்கரன் கோவிலை சேர்ந்த முகமது இத்ரீஸ் தனது நண்பருக்கு ரூ.2000 அனுப்பிய பிறகு வந்த குறுஞ்செய்தியில் மீதமுள்ள தொகை ரூ.753 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரம் மீதம் இருப்பதாக செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக புகார் அளித்ததை அடுத்து முகமது இத்ரிஸின் வங்கிக் கணக்கை கோட்டக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

bANK

முன்னதாக நேற்று தஞ்சை பூதலூரை சேர்ந்த கணேசன் என்பவருடைய கோடாக் மகேந்திரா வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது. சாமான்யர்களின் வங்கி கணக்குகளில் கோடிகளில் வரவு வைக்கப்பட்டதாக அடுத்தடுத்து வரும் குறுஞ்செய்திகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ