
முன் விடுதலை தொடர்பான ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ மாணவி மரணம் : கடும் தண்டணை பெற்றுத்தர சீமான் கோரிக்கை..
அந்த கடிதத்தில், தமிழக சட்டப்பேரவை விவாதத்தின் போது, உறுப்பினர்கள் சிலர் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நெடுநாள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அவர்கள் அனைவரையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, விரைவில் விடுதலைச் செய்ய வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பினர்களின் கோரிக்கைகள் கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் ரகுபதி, நெடுநாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
எனவே, நிலுவையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைவாகப் பரிசீலித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161- ன் கீழ் முன் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.