spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் – முதல்வர் அறிவுரை

கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் – முதல்வர் அறிவுரை

-

- Advertisement -

கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும்  உடனடியாக மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் – முதல்வர் அறிவுரைஅக்டோபர், 2025  மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து, 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டர் வேளாண்பயிர்களுக்கும், 345 ஹெக்டர்  தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

we-r-hiring

மேலும், டித்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சவுக்கு சங்கர் வழக்கு…சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

MUST READ