spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்!

காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்!

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

we-r-hiring

திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே தீக்காயங்களுடன் புதர் பகுதியில் துடிதுடித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் அப்பெண்ணின் பெயர் பூஜா என்பதும், அவரது பெற்றோர் இறந்துவிட்டதால் மாமாவின் வீட்டில் தங்கி பனியன் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. அங்கு அவர் லோகேஷ்(22) என்ற இளைஞரை காதலித்து வந்ததுள்ளார். இந்நிலையில் லோகேஷ் கடந்த சில மாதங்களாக பூஜாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த பூஜா தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோஷேக் காதலி பூஜாவை(19) கொல்ல திட்டமிட்டுளார். அவரை பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனப்பாளையம் பகுதிக்கு அழைத்து சென்ற லோகேஷ், பூஜாவின் தலையில் கல்லால் அடித்து, பெட்ரோல் ஊற்றி எரித்ததுள்ளார். உடலில் தீ பற்றிய நிலையில் அலறியபடி, தட்டம்பாளையம் சாலையில் ஓடிய பூஜாவை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விவகாரத்தில் காதலன் லோகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

MUST READ