spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவருண் - லாவண்யா தம்பதி வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலம்... முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு...

வருண் – லாவண்யா தம்பதி வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலம்… முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு…

-

- Advertisement -
தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற படத்தில் நடித்தார்.

தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் நடைபெற்றது. இத்தாலியில் டசுக்கனி நகரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் இருவரின் திருமணமும் நடைபெற்றது. இதில், பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், ராம் சரண், பவண் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் இருவரின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்லு அர்ஜூன், நாக சைதன்யா, சிரஞ்சீவி என அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

MUST READ