- Advertisement -
தென்னிந்தியாவின் மிக சிறந்த நடிகைகளில் சாய் பல்லவி முக்கியமானவர். தனது எளிமையான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக அவர் கவர்ந்துள்ளார். நடிப்பு மற்றும் நடனத்தில் மிகவும் சிறந்து விளங்கும் சாய் பல்லவி ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்று வருகிறார்.
சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கின்றார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது




