நடிகர் கார்த்தி ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜப்பான் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை குக்கூ, ஜிப்ஸி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியிருந்தார். இதை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கார்த்தி தனது 26 ஆவது படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கார்த்தியின் 27 வது படத்தை ’96’படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 17-ம் தேதி கும்பகோணத்தில் தொடங்குகிறது. முதல் கட்டமாக 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.