
ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து, இஎம்ஐ கார்டு விநியோகிப்பதை நிறுத்தி உள்ளதாக பங்குச்சந்தைகளுக்கு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

“கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவுக் கூர்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளக் குறைப்பாடுகளை சரி செய்யும் வரை வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ கார்டு விநியோகத்தை நிறுத்தி வைப்பதாகவும், முகவர் வாயிலாக பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அதில் பஜாஜ் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
இஎம்ஐ கார்டுகளை புதிய வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்தி வைப்பதால், தங்களது நிதி வணிகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும், அந்த நிறுவனம் கூறியுள்ளது.
“சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ரிசர்வ் வங்கியின் அனைத்து விதிமுறைகள் மற்றும் குறியீடுகளைப் பின்பற்றும் வகையில், குறைப்பாடுகள் விரைந்து சரிச் செய்யப்படும் என்றும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், பங்குச்சந்தைகளுக்கு தாக்கல் செய்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இகாம் மற்றும் இன்ஸ்டா இ.எம்.ஐ. கார்டு மூலமாக கடன் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.